மடவளை மதீனா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி!

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்-

டவளை பஸார் மதீனா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி (29) திங்கட்கிழமைபாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் ஜனாபா எம்.இஸட்.யூ.ஹிதாயா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்குவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வுக்கு வத்தகம வலயக் கல்விப் பணிப்பாளர் எச்.கே.விஜயரட்ன கௌரவ அதிதியாகவும், மத்திய மாகாணஉடற்கல்வி உதவிப் பணிப்பாளர் அதுல ஜயவர்தன, வத்தகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நவரட்ண, நகரதிட்டமிடல், தேசிய நீர்வழங்கல் அமைச்சின் இணைப்பாளரும், மடவளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்தியகுழுத் தலைவருமான ஏ.எல்.எம்.றிஷாட் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்திச் சபைஉறுப்பினர்கள் உள்ளிட்ட பெரும் திரளான பொதுமக்கள்; கலந்து கொண்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதி பிரதி அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட அதிதிகளுக்கு பாடசாலை நிர்வாகத்தினரால் மகத்தானவரவேற்பு வழங்கப்பட்டது.

இதன்போது மாணவர்களுக்கான மெய்வல்;லுனர் போட்டிகள், அஞ்சலோட்டப் போட்டிகள், மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் உடற்பயிற்சி நிகழ்சிகளும் இடம்பெற்றன.

நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் 964 புள்ளிகளைப் பெற்று மினா இல்லம் இவ்வருடத்திற்கானசம்பியனானது. 883 புள்ளிகளைப் பெற்று சபா இல்லம் இரண்டாம் இடத்தையும், 817 புள்ளிகளைப் பெற்று ஹிறாஇல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றன.

இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்களை பிரதிஅமைச்சர் உள்ளிட்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -