முஸ்லிம், தமிழ் மக்களை புறந்தள்ளியர்கள் நாட்டில் படுதோல்வி அடைந்தனர்- மாஹீர் MPC

எம்.எம்.ஜபீர்-

முஸ்லிம், தமிழ் மக்களை புறந்தள்ளிவிட்டு ஆட்சி நடத்தலாம் என்று கனவு கண்ட மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுள்ளார். முஸ்லிம் தமிழ் மக்கள் ஒன்றிணைந்ததன் காரணமாகவே எமது நாட்டில் இன்று (13) நடைபெறும் நல்லாட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினார்கள். 

இறக்காமம் மர்ஹைபா மகளிர் சங்கத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி கதிரைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளரும், ஊடகவியலாளருமான எஸ்.எல்.நிஸார் தலைமையில் அமைப்பின் வளாகத்தில் இன்று (13) நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.ஜெமீல் காரியப்பர், முன்னாள் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எல்.முஸ்னீ, யூ.எல்.எம்.ஜிப்ரி, இறக்காமம் ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஏ.கே.ஏ.ரவூப், இறக்காமம் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.சபீர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர் ஏ.றியாஸ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள், பள்ளிவால் நிர்வாகம், இறக்காமம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்ப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், எதிர்காலத்தில் இந்த அப்பாவி மக்களை வழிநடாத்துகின்ற பொறுப்பு உள்ளுர் அரசியல் வாதிகளின் கையிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறக்காமம் வரிப்பத்தான்சேனை பிரதேச முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளை அந்நிய இனத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வழங்குகின்றனர். அந்த வேட்பாளர் எப்படிப்பட்டவர் என்றால் எங்களுடைய தேசியக் கொடியில் இருக்கின்ற சிறுபான்மை இனமான தமிழர், முஸ்லிம்களின் நிறத்தை நீக்கி தனி சிங்களவர்களை பிரதிநித்துவப்படுத்த வேண்டும், இலங்கை சிங்கள நாடு என்று போராடும் ஒருவருக்கு வழங்குவது கவலைதரும் விடயமாகும். இந்த இலங்கை நாடு எங்களுக்கும் சொந்தமானது நாங்கள் இங்குதான் பிறந்தோம். ஆகையால் இலங்கையிலுள்ள முஸ்லிம்களை புறந்தள்ளிவிட்டு இங்கு ஆட்சி நடத்த முடியாது. 

எவராக இருந்தாலும் ஊர்காரர்களுக்கு வாக்களிக்க வேண்டும் வெளியில் இருந்து வாக்கு கேட்டுவரும் இவ்வாறன அன்னிய சகோதரர்களுக்கு வாக்களிப்பதன் ஊடாக எமது பிரதேசத்திற்கும் ஏனைய முஸ்லிம் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த முனையக்கூடாது. தேசியக் கொடியில் சிறுபாண்மை இனத்தை அடையாளப்படுத்தும் நிறத்தை நீக்கி சுதந்திர கொடியேற்றிவர்கள் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இவ்வாறான பிரதேங்களில் இருந்து நீங்கள் வாக்களித்து வெற்றி பெற்று உருவானவர்கள் என மேலும் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -