கல்குடா முஸ்லிம்களின் காணி விடயத்தில் கரிசணை காட்டும் சிப்லி பாரூக்- வீடியோ



ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-


ட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச 

செயலக எல்லைக்குட்பட்ட மருதன் கேணி, குஞ்சான் கேணி குளம், 

ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்கும் கிரான் பிரதேச செயலகத்திற்கும் 

உட்பட்ட கல்லிச்சை , வடமுனை ஊத்துச் சேனை, புனானை மேற்கு 

போன்ற பிரதேசங்களில் 1985ம் ஆண்டுக்கு முன்னர் வாழ்ந்து வந்த 

கல்குடா முஸ்லிம்கள் அக்கால பகுதியில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை 

காரணமகவும், இன வன்செயல்கள் காரணமகவும் தங்களுடைய 

இடங்களிலிருந்து முற்றாக விரட்டப்பட்ட நிலையில் மீழ் குடியேற்றம் 

செய்யப்படாமல் தற்பொழுது முஸ்லிம்கள் செரிந்து வாழக்கூடிய கல்குடா 

முஸ்லிம் பிரதேசங்களில் வாழ்ந்து வருக்கின்றனர்.


இந்த நல்லாட்சியில் நீதித்துறையானது சுயாதீனமாக இயங்குகின்ற 

படியினால் குறித்த மக்களுடைய காணிகளை உரிமையாளர்களிடம் 

சட்டரீதியான முறையில் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் கிழக்கு 

மாகாண சபை உறுப்பினர் அல்-ஹாஜ் சிப்லி பாரூக் தான் 

முன்னெடுதுவரும் வீதிக்கு ஒரு நாள் என்ற செயற்திட்டத்தின் மூலம் 

மக்களினுடைய குறைகளை நேரடியாக கண்டறியும் விதத்தில் குறித்த 

பிரதேசங்களில் காணிகளை இழந்து மீழ் குடியேற்றப்படாமல் தற்பொழுது 

கல்குடா செம்மண்னோடை, மற்றும் மாஞ்சோலை போன்ற 

பிரதேசங்களில் வாழ்ந்து வருக்கின்ற யுத்ததினாலும் 

வன்செயல்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களுடனான சந்திப்பினை 

ஏற்படுத்தி அவர்களுடைய குறைகளை கண்டறியும் நிகழ்வினை 12.02.2016 

வெள்ளிக்கிழமை செம்மண்னோடை, மாஞ்சோலை போன்ற 

பிரதேசங்களில் மேற்கொண்டார்.


வை.எல்.மன்சூர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் காத்தன்குடி 

நகர சபை உறுப்பினர்  எச்.எம்.எம்.பாக்கீர், ஓட்டமாவடி பிரதேச சபையின் 

உறுப்பினர் எஸ்.ஐ.முஹாஜிரீன், முன்னாள் வாழைச்சேனை பிரதேச சபை 

உறுப்பினர் ஐ.எல்.அப்துர் கபூர், மற்றும் பாதிகப்பட்ட பொதுமக்கள் என 

பலர் கலந்துகொண்டதனை அவதானிக்ககூடியதாக இருந்தது.

இங்கு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்...

உருகாமம், உன்னிச்சேனை போன்ற பிரதேசங்களில் அதிகளவான 

முஸ்லிம்களின் கிராமங்கள் யுத்தாகாலத்திற்கு முன்பாக 

இருந்திருக்கின்றன போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. தற்பொழுது 

அவைகள் இல்லாமல் ஆகப்பட்டு விட்டன. அக்காலங்களில் 

அப்பிரதேசங்களில் இருந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 

காணிகளுக்கான ஒப்பங்கள் ஓவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்படல் 

வேண்டும் என்ற சட்டம் இருந்து வந்தது. 

ஆனால் எம்மவர்கள் அதனை 

புதுப்பிக்கவுமில்லை அதற்கு அடுத்ததாக வன்செயல் காரணமாக முஸ்லிம் 

அந்த காணிகளிலிருந்து வெளியேறி முஸ்லிம்கள் செறிந்து வாழக்கூடிய 

பிரதேசங்களுக்குள் குடி பெயர்ந்தமையினால் காணி ஒப்பங்கள் 

புதுபிக்கப்படாமையினை காரணமாக முற்படுத்தி முஸ்லிம்களுக்கு 

காணிகள் தேவையிலை எனக்காண்பித்து அவர்களுடைய ஆவணங்கள் 

அனைத்தும் பிரதேச செயலகம் தொடக்கம் மாவட்ட செயலகம் வரையில் 

பெயர் மாற்றப்பட்டு வேறு நபர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இது தொடர்பாகவும் மாஞ்சோலை காணிகள் சம்பந்தமாகவும் 

இரண்டு வருடங்களுக்கு முன்பு இரு சமூகங்களுக்கிடையிலான 

கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நான் சென்றிருந்த 

வேலையில் இந்த காணி சம்பந்தமான விடயங்களைப்பற்றி 

கதைப்பதற்காக கல்குடா பிரதேசத்தினை பிரதி நிதித்துவப்படுத்தி எந்த 

அரசியல் தலைமைகளும் வருகை தந்திருக்க வில்லை என்பது எனக்கு 

மிகவும் மனவேதனை அளிக்ககூடிய விடயமாக இருந்தது. ஆனால் தமிழ் 

சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்தி முன்னால் கிழக்கு மாகாண 

முதலமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் ( பிள்ளையான் ), தமிழ் 

தேசிய கூட்டமைப்பினை பிரதி நிதித்துவப்படுத்தி பாராளுமன்ற 

உறுப்பினரரான யோகேஸ்வரன், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் 

பொன்செல்வராசா, மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அணைவரும் 

வருகை தந்திருந்த வேலையில் அவர்களுக்கு நான் அதிசயமான 

பார்வையில் தென்பட்டதினால் இவ்விடயம் சம்பந்தமாக எனக்கு 

உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் ஓட்டமவடி பிரதேச 

சபையின் முன்னால் தவிசளர் லெப்பை ஹாஜியாரினை எனது மெய் 

பாதுகாவலர்களை அனுப்பி குறித்த இடத்திற்கு அழைப்பித்திருந்தேன்.

அப்பொழுது அங்கு வருகை தந்திருந்த முன்னால் முதலைமைச்சர் 

பிள்ளையான் மாஞ்சோலை என்பது முஸ்லிம்களினுடைய கிராமமாகும். 

அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் தற்பொழுது 

முஸ்லிம்கள் சற்று முன்னோகி வந்திருகின்றனர். ஆகவே நாங்கள் 

இப்பொழுது இருக்கின்ற எல்லையினை வரையறுத்துக்கொள்வோம் என 

முஸ்லிம்களின் இடப்பிரச்சனையினை கருத்தில் கொண்டவராக மிகவும் 

நிதானமாகவும், பக்கசார்பில்லாமலும் கூறியதன் அடிப்படையில் 

அவ்விடயம் தீர்மானமாகவும் எடுக்கப்பட்டு மீண்டும் அது சம்பந்தமான 

கூட்டங்கள் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டும் கூட்டங்கள் இடம் 

பெறாமல் இன்றும் அதற்கான தீர்விற்க்காக நீதிமன்றத்தினை 

நாடியவர்களாக நாங்கள் இருந்து வருக்கின்றோம்

இவ்வாறு காணி பிரச்சனை என்று பார்க்குமிடத்தில் முஸ்லிம்களுக்கு இது 

ஒரு பாரிய சவாலாக இருந்து வருக்கின்றது. கல்குடா, காத்தான்குடி, 

ஏராவூர் என பார்க்கின்ற பொழுது சன நெரிசலுக்குள் உள்ளாகியும், 

அதனால் தூய குடிநீர் பிரச்சனைக்கு முகம்கொடுத்தவர்களாகவும், தின்ம 

கழிவினை அகற்றிக்கொள்ள முடியாதவர்களாக மூன்று ஊர்களையும் 

சேர்ந்த மக்கள் போராடிக்கொண்டிருகின்ற இந்த கால கட்டத்தில் கல்குடா 

பிரதேசத்தில் மட்டுமே முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளுக்கான 

மாற்று காணிகளை பெற்றுக்கொடுக்கின்ற அதிக வாய்ப்புக்கள் 

காணப்படுகின்றது. ஆனால் இந்த விடயத்தில் முஸ்லிம்களின் 

உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றோம் என கூறி தங்களது 

அரசியலினை முன்னெடுத்து வருகின்ற அரசியல்வாதிகள் இதற்காக 

நாங்கள் குரல்கொடுக்க துவங்கினால் தங்களுடைய அரசியல் எதிர்காலம் 

சூனியமாக்கப்பட்டு விடும் என்ற பயத்தின் காரணமாக மெளனித்து வாய் 

மூடி நிற்கின்றனர்.


ஆகவே கல்குடாவில் முஸ்லிம்களுக்கு தேவையான காணிகளும், 

அவர்களிடம் ஏற்கனவே இருந்த ஒபங்களின் அடிப்படையில் இருந்த  

சொந்த காணிகளுகளும் நியாமான அடிப்படையில் அவர்களது சன 

நெரிசலினை கருத்தில் கொண்டு காணிகள் பகிர்ந்தளிக்கப்படாமல் 

விடுமாயின் இன்னும் பத்து வருடங்களுக்கு பின்பு கல்குடாவில் 

வாழுக்கின்ற முஸ்லிம் மக்கள் மலசல கூட நீரினைத்தான் குடிக்க 

வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். 


ஆகவே இப்பிரச்சனைக்கான தீர்வினை நாங்கள் நீதி மன்றத்தின் 

மூலமாகத்தான் பெற்றுக்கொள்ள முடியும் என்று என்னுவோமானால் 

அதற்கு மிக நீண்டகாலம் தேவைப்படும் என்ற படியினால் தமிழரசு 

கட்சிக்கும் முஸ்லிம்களின் ஏகபிரதி நிதிகளாக செயற்படுக்கின்ற சிறீலங்கா 

முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கும் தற்பொழுது நெருங்கிய உறவு 

காணப்படுகின்றபடியினால் தமிழ் சமூகத்துடனும் அதன் அரசியல் 

தலைமைகளுடனும் சமரச அடிபடையில் அவர்களுக்கு விட்டுக்கொடுக்க 

வேண்டியவைகளை முஸ்லிம் தரப்பிலிருந்து விட்டுக்கொடுத்தும் 

முஸ்லிம்களுக்கு தேவையானவைகளை தமிழ் சமூகத்தின் தரப்பிலிருந்து 

முஸ்லிம் தரப்பினருக்கு விட்டுத்தரும் வகையில் அதிகாரத்தினை 

அரசியல் ரீதியாக சுமூகமான முறையில் பயன்படுத்துவதினூடாகத்தான் 

இதற்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என முதற்கண் 

அல்லாஹ்வை ஞாபகப்படுத்தியவனாக நம்புகின்றேன் எனத் தெரிவித்த 

மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் வருகை 

தந்திருந்தவர்களிடமிருந்து குறிப்பிட பிரதேசத்தில் வாழ்ந்தமைக்கான 

ஆதாரங்களை மாகாண சபை உறுப்பினர் பெற்றுகொண்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -