எம்.ரி. ஹைதர் அலி-
கிழக்கு மகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்கள் இன்று 2016.02.20ஆந்திகதி காத்தான்கு ஆதார வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு காத்தாண்குடியில் சமைத்த உணவு விஷமானதால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை பார்வை இட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்திலுள்ள கடையொன்றில் சமைத்து விற்கப்பட்ட உணவுகள் நேற்று விஷமானதால் இதுவரை (தற்பொழுது முதல்) 51 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவசர கவனம் செலுத்திய மாகாண சபை உறுப்பினர் உடனடியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு மேலதிக வைத்தியர்கள் மற்றும் மருந்து வகைகளை உடனடியாக பெற்றுத்தருமாறும் மேலதிக சிகிச்சைகளுக்காக தேவையான ஏற்பாடுகளையும் செய்து தருமாறு தொலைபேசியினூடாக கேட்டுக்கொண்டார்.
மேலும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியை உடனடியாக நேரில் சந்தித்து இது தொடர்பாக உரிய மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறும், அவசர வைத்திய சேவை மற்றும் ஆளனி தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார், இது தொடர்பாக உடனடி கவனம் செலுத்துமாறு வைத்தியசாலை அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார்.





