சிலாவத்துறை ஆட்டோ சாரதி மீது முருங்கனில் தாக்குதல்




கே.சி.எம்.அஸ்ஹர்-

சிலாவத்துறை ஆட்டோச் சாரதி M.சாஜிர் என்பவர் மீது முருங்கனில் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.படுகாயமடைந்த இவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விடயம் பொலீசாரிடம் முறையிடப்பட்டும் உரிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.மேலும் சிலாவத்துறை ஆட்டோச் சாரதிகட்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடப்படுவதாகவும் அறிகிறோம்.

வடமாகாண முஸ்லிம்களின் மீள் வருகையை விரும்பாத ஒரு பயங்கரவாத அடிவருடிகளின் செயற்பாடே இதுவாகும். சிலாவத்துறையிலிருந்து முருங்கனுக்கு பயணிகளை ஏற்றிவரும் ஆட்டோச்சாரதிகள் முருங்கனில் இருந்து வெறுமையாக யாரையும் ஏற்றாமலே செல்ல வேண்டும் எனக் காட்டுமிராண்டிச்சட்டம் எதுவுமுண்டா?

“பயணிகள் விரும்பும் வாகனத்தில் பயணம் செல்லலாம்”இது அவர்களின் உரிமை,

முருங்கனில் நடைபெறும் இச் செயற்பாட்டை தடுக்க பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு செல்ல வேண்டும்.முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இவ்விடயத்தில் உடன் தலையிட வேண்டுமென மக்களை எதிர்பார்க்கிறனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -