வைத்தியம் என்று சிங்கப்பூர் சென்றவர் : பிறந்த நாள் கொண்டாட்டத்தில்

மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலைக்கு சென்றுள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, தனது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் தனது மகன் ஷத்துரவின் பிறந்த தினத்தை சிங்கப்பூரில் வைத்தே கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகத்துடன் காணப்படுவதாகவும் ஓய்வில் உள்ளதாகவும் குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று (20) மாலை விசேட பரிசோதனையொன்றுக்கு உட்படுத்தப்பட்டதாக நெருங்கிய தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, அமைச்சரின் உடல் நிலை மோசமாக உள்ளதாக பரப்பப்பட்டு வரும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லையென அமைச்சரின் ஊடகப் பேச்சாளர் நிபுன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். (மு)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -