"என்னை விட்டு இன்னொருவனுடன் சென்றாய் " பாடலை வெளியிட்டார் மகிந்தவின் மகன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித்த ராஜபக்ஷ "மங்முல வெலா " என்ற காணொளி பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளார். இந்த பாடலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளதோடு, பிள்ளைகளின் திறமை பெற்றோரின் மகிழ்ச்சிக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

"என்னை விட்டு இன்னொருவனுடன் சென்றாய் " என்ற வரிகளை கொண்ட இந்த பாடலை தானே எழுதி பாடியுள்ளார் ரோஹித்த ராஜபக்ஷ.

இப் பாடலுக்கு பாசன் லியனகே தனது இசையமைப்பை செய்துள்ளார். இப்பாடலின் வரிகள் அனைத்தும் காதல் தோல்வியின் வலியை உணர்த்தும் விதமாக அமைத்துள்ளது.

இப் பாடலை யு டியூப் தளத்தில் வெளியிட்டு இரண்டே நாட்களில் 11 இலட்சத்துக்கு அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -