மீனவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டு 21.02.2016 ம் திகதி பி.ப. 4.00 மணிக்கு வைபவரீதியாக திறந்து வைக்கபட்டதுடன் நீண்ட காலம் குறித்த மீனவர்களுக்கான குடிநீர் வசைதியற்ற நிலையில் மீனவர்களுக்கான குடிநீர் கிணறும் மாகாண சபை உறுப்பினர் அன்வரால் பெக்கோ இயந்திரத்தின் மூலம் தோண்டி ஆரம்பித்து வைக்கபட்டது.
குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்,எம்.அன்வர், முன்னாள் சேர்வில பிரதேச சபையின் உறுப்பினர் பைசல் ஹாஜி, தோப்பூர் ஜம்மியத்துல் உலமா தலைவர் மௌலவி ரிஸ்வான், தோப்பூர் ஸ்ரீ லங்கா முஸ்லின் காங்கிரஸின் மத்திய குழுதலைவர் ரசீத், பட்டியடி செல்வநகர், அல்லை நகர் பள்ளிவாயல்களின் நிர்வாகிகள் உட்பட மாகாண சபை உறுப்பினரின் தோப்பூர் பிரதேச இணைப்பாளர் ரிபாஸ் மற்றும் பிரதேச மீனவர்களும் கலந்து கொண்டனர்.





