வடமாகாண புதிய ஆளுநருக்கு முஸ்லிம்கள் அமோக வரவேற்பு

டமாகாண புதிய ஆளுநராக வந்திருக்கும் ரெஜினோல்ட் குரே ‬ யாழ் முஹம்மதியா பள்ளிவாசலுக்கு சென்று பிராத்தனை செய்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (19) அன்று குறித்த பள்ளிவாசலுக்கு மாலை 4 மணியளவில் விஜயம் செய்தார்.

புதிய ஆளுநரை பள்ளிவாசலின் பேஷ் இமாம் மஹ்மூத் பலாஹி நறுமணம் பூசி வரவேற்றார். தொடர்ந்து பள்ளிவாசல் உள் மண்டபத்திற்கு சென்று ஆளுநர் ஆசி பெற்றதுடன் துஆ பிராத்தனையிலும் பங்குபற்றினார்.

அடுத்து வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் அய்யூப் கேட்டுக்கொண்டதற்கிணங்க யாழ் மக்களுடன் சிறிய சந்திப்பிலும் கலந்து கொண்டார். மேலும் ஆளுநராக கடமையேற்றவுடன் ரெஜினோல்ட் குரே சர்வமத பிராத்தனையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -