பல்கலைக்கழக ஆடை கட்டுப்பாடு வாபஸ் - மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனுக்கு நன்றி

பாறுக் ஷிஹான்-
யாழ் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட ஆடை அணிதல் கட்டுப்பாடுகள் தொடர்பான சுற்று நிரூபம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பதில் கலைப்பீடாதிபதி மற்றுமொரு சுற்றுநிருபத்தை வெளியிட்டுள்ளார்.

அதன் படி ஏலவே வெளியிடப்பட்ட ஆடை தொடர்பிலான கட்டுப்பாடுகள் குறித்து அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதே வேளை வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனுக்கு பல்கலைக்கழக முஸ்லீம் மாணவர்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

மேற்குறித்த விடயம் தொடர்பாக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்துடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத் தந்தமையை இட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்வாறான நிலைமை ஏற்படாமல் இருந்திருந்தால் சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்கலைக்கழக கல்வியை விட்டு விலக தீர்மானித்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -