சார்க் வலய நாடுகளின் விளையாட்டுத்துறை அமைச்சர்களுக்கிடையில் பேர்ச்சுவார்த்தை!



ஹாசிப் யாஸீன்-

சார்க் வலய நாடுகளின் விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பாக சார்க் நாடுகளின்விளையாட்டுத்துறை அமைச்சர்களுக்கிடையிலான பேர்ச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை (14)இந்தியா அசாம் மாநில குவாகத்தி நகரிலுள்ள இந்திராகாந்தி மெய்வல்லுனர் அரங்கு கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.

இப்பேச்சுவார்த்தையில் இந்திய இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர்சர்வாநந்தா சொனோவல், இலங்கை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸ், பங்களாதேஷ் இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் விரன்சிக்டர், நேபாள் இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் சத்ய நாராயண மண்டல்ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பேச்சுவார்த்தையின் போது சார்க் வலய நாடுகளின் வீரர்களின் விளையாட்டுத் திறன்களைமேம்படுத்தல், சர்வதேச ரீதியில் பயிற்சியளித்தல், விளையாட்டின் நுட்பங்களை பகிர்ந்துகொள்ளல், வீரர்களை ஊக்குவித்தல் சம்பந்தமாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது இந்திய இந்திய இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் சர்வாநந்தாசொனோவல், சார்க வலய நாடுகளின் விளையாட்டு வீரர்களின் விளையாட்டுத்துறைஅபிவிருத்திற்கான நிதி உதவிகள் மற்றும் தேவையான பயிற்றுவிப்பாளர்களின்உதவிகளையும் பெற்றுத்தர இந்தியா தயாராகவுள்ளது எனத் தெரிவித்தார்.

இப்பேச்சுவார்த்தையின் போது பிரதி அமைச்சர் ஹரீஸ்,

இலங்கை விளையாட்டுத்துறை மூலம் பிரபல்யம் அடைந்து வருகின்றது. எமது நாட்டுவீரர்களின் திறன்களை மேம்படுத்தவும், வசதி வாய்ப்புக்களை அதிகரிக்கவும், விளையாட்டின்புதிய நுட்பங்களை வீரர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்குமாக சர்வதேச நாடுகளின்உதவிகளையும் குறிப்பாக சார்க் நாடுகளின் நிதி மற்றும் ஏனைய உதவிகளையும் நாம்எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்தார்.

இப்பேச்சுவார்த்தையில் பல்வேறு சாதகமான முடிவுகள் எட்டப்பட்டதாகவும் பிரதி அமைச்சர்ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -