சஜின் வாஸ் குணவர்தனவின் யானையை தூக்கிய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்...!

வெளிவிவகார அமைச்சின் முன்னாள் காண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, பல வருடங்கள் வைத்திருந்த யானை ஒன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர்.

இந்த யானை கடந்த 15 வருடங்களாக அம்பலாங்கொட, ஹிரேவத்த விகாரையில், யானை பாகன் ஒருவரை கொண்டு சஜின் வாஸ் குணவர்தன பாராமரித்து வந்துள்ளார்.

எனினும் இன்று அங்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், யானை லொறி ஒன்றில் ஏற்றி, எடுத்துச் சென்று அதனை உடவலவ யானை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, யானை வளர்க்க அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்பதால், அதனை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -