எம்.எம்.மத்தீன்-
உலகத்தின் மிக மலிவான 3ஜி ஸ்மார்ட்ஃபோன் ஒன்றினை ரிங்கிங் பெல் என்ற இந்திய நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த விலை எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கான பதில் தான் மேக்கிங் இந்தியா திட்டம்...
(அதாவது தொழில்நுட்பங்களுக்கான மானியத்திட்டம் போன்றது....)
1.3GHz குவாட் கோர் ப்ராஸசர், 1ஜிபி ரெம், 8ஜிபி சேமிப்பகம் (32ஜிபி மெமரி கார்டும் பயன்படுத்தலாம்), 4 இன்ச் தொடுதிரை, 3.2எம்.பி, 0.3 எம்பி முன்,பின் கேமராக்கள், 2சிம் வசதி, 3ஜி , வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் வசதி , 1450 mAh பேட்டரி என்று சரமாரியாக பல பெறுமதியான வசதிகளோடு அறிவித்திருக்கிற இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட் ஃபோன் அண்ட்ரொய்ட் லொல்லி பொப் எனப்படுகிற வெர்சன் 5.1 இல் இயங்கக் கூடியதாகும்...
(அத்தோடு இதற்கு 1 வருட உத்தரவாதமும் உண்டு)
இந்திய சந்தையில் மட்டுமல்லாது உலக அளவிலும் மிக மலிவான ஃபோனான இந்த ஃப்ரீடம் 251 என்ற கையடக்கத்தொலைபேசி பட்டி, தொட்டி என்று பல திசைகளிலும் பாமரன் படித்தவன் என்று வித்தியாசமில்லாம எட்டிப்பார்க்கும் என்பது நிதர்சன உண்மையாகும்.
இந்தியாவில் 251 ரூபா மதிப்புள்ள இந்த ஃபோன் அதே விலையில் வெளிநாடுகளில் கிடைப்பது சந்தேகத்திற்குரியது தான்...
இதை தயாரித்த நிறுவனம் இதற்கு முதல் 3000 ரூபாய் இந்திய விலைக்கு 4ஜி தொலைபேசி ஒன்றை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
