சிவனொளிபாதமலை யாத்திரிகர்களின் நலன் கருதி அட்டன் பகுதிகளில் விசேட பொலிஸ் பாதுகாப்பு

க.கிஷாந்தன்-

சிவனொளிபாதமலைத் தரிசன யாத்திரைக் காலம் ஆரம்பித்து மூன்று மாதகாலப்பகுதியில் யாத்திரிகர்களின் வருகை ஐந்து இலட்சத்துக்கும் அதிகமாக காணப்பட்டுள்ளது.

யாத்திரிகர்கள் அட்டன் நல்லதண்ணி ஊடாகவும் பெல்மடுல்ல இரத்தினபுரி ஊடாகவும் வருகை தருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாத்திரிகர்கள் அதிகமாக வருவதன் காரணமாக விசேட பொலிஸ் பாதுகாப்பு அமுல்ப்படுத்தயிருப்பதாக அட்டன் பொலிஸ் நிலைய அத்தியட்சகர் சமன் யடவர தெரிவிக்கின்றார்.

அத்தோடு கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சிவனொளிபாதமலைக்கு செல்லும் அனைத்து பேரூந்துகளும் கினிகத்தேனை தியகல சந்தியின் ஊடாகவும் வேன் மற்றும் ஏனைய வாகனங்கள் அட்டன் வழியாக செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் நலன் கருதி கொழும்பு தொடக்கம் அட்டன் வரை விசேட புகையிரத சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகையிரத சேவை கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து 7.30 மணியளவில் புறப்பட்டு அட்டன் புகையிரத நிலையத்தை நள்ளிரவு 01.00 மணியளவில் வந்தடையும்.

இந்த புகையிரத சேவை இம்மாதம் 19,20,21,26,27 ஆகிய தினங்களில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -