மு.காவை விட்டு நான் வெளியேறமாட்டேன் - ஹசன் அலி

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கும் எனக்கும் இடை­யி­லான உறவு தொப்புள் கொடி உறவை விட பல­மா­ன­தாகும். என்னை எவ­ராலும் வெளியே தள்ள முடி­யாது. நான் கட்­சிக்கு இடையில் வந்து சேர்ந்­த­வ­னல்ல.

தொடர்ந்தும் கட்­சி­யு­ட­னேயே இருப்பேன் என முன்னாள் இரா­ஜாங்க அமைச்­சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லா­ள­ரு­மான எம்.ரி. ஹஸன் அலி தெரி­வித்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மைத்­து­வத்­துக்கும் செய­லாளர் ஹசன் அலிக்கும் இடையில் முரண்­பா­டுகள் நில­வு­வ­தாக தெரி­விக்­கப்­பட்டு வரும் நிலையில் அது பற்றி வின­வி­ய­போதே ஹசன் அலி இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்:

‘மறைந்த தலைவர் அஷ்­ரபின் காலத்தில் கிழக்கில் 16 ஆயுதக் குழுக்கள் இயங்கி வந்த சந்­தர்ப்­பத்தில் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளி­ட­மி­ருந்து நான் அடி வாங்­கி­யுள்ளேன். அன்று பல சவால்­க­ளுக்கு மத்­தியில் பாது­காத்து வந்த கட்­சியே முஸ்லிம் காங்­கிரஸ். எனக்கும் கட்­சிக்கும் இடை­யி­லுள்ள உறவு சட்­டத்­துக்கும் அப்­பாற்­பட்­டது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மக்­க­ளுக்­கு­ரிய கட்சி. வடக்­கிலும் கிழக்­கிலும் வட கிழக்­குக்கு வெளி­யிலும் அஷ்­ரபின் சிந்­த­னை­யு­ட­னேயே இயங்கி வரு­கி­றது. கட்­சியில் நீ தான் இருக்க வேண்டும் அல்­லது இருக்க முடி­யாது என்று கட்­டுப்­ப­டுத்த முடி­யாது.

தேசியப் பட்­டியல் நிய­மனம் எம்.எஸ். தௌபீக்­குக்கு வழங்­கப்­பட்­ட­தற்கும் எனக்கும் எந்தப் பிரச்­சி­னை­யு­மில்லை. நான் அதனை எதிர்க்­க­வு­மில்லை. கட்சிக்கும் எனக்கும் ஆத்ம தொடர்பு இருக்கிறது. நான் கட்சியுடனேயே தொடர்ந்தும் இருப்பேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -