மஹிந்தவின் மகனின் கடற்படை பயிற்சிக்காக 220 இலட்சம் ரூபாய் செலவு...!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் லெப்டினன்ட் யோஷித ராஜபக்ஷவின் வெளிநாட்டு கடற்படை பயிற்சிக்காக 220 இலட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007 – 2010 ஆண்டு காலப்பகுதியில் உக்ரைன் நாட்டில் ஒரு பயிற்சிக்காகவும் பிரித்தானியாவில் 3 பயிற்சிகளுக்காகவும் இந்த தொகை செலவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் நலின்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கயந்த கருணாதிலக இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -