பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்பட்டு அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் தெரிவிக்கையில் ,
சிறைச்சாலையில் வைத்து ஞானசார தேரரைக் கொலை செய்வதற்கு முஸ்லிம் அடிப்படைவாதிகளுடன் உறவுகளைப் பேணும், சிறைத்தண்டனை அனுபவிக்கும் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் முஸ்லிம் ஜிகாதிகள் இவ்வாறு திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் ராஜகிரியவில் பெளத்தர்கள் போராட்டங்களை நடாதிவந்தனர். இன்று இவரை கைது செய்து வெலிகடை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.