அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இணைந்து செயற்பட தயார் - அமைச்சர் றிஷாட்

மைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இணைந்து செயற்பட தயாராகவிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன், இலங்கை முஸ்லிம்களின் நலன்களை வென்றெடுக்க முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் இணைந்து செயற்படுவதைத் தவிர மாற்றுவழி இல்லை எனவும் தெரிவித்தார்.

இதகுறித்து அவர் மேலும் கூறியதாவது.

இலங்கை முஸ்லிம்களுக்கு இது முக்கியமானதொரு காலகட்டம். யாப்பு சீர்திருத்தம், உள்ளுராட்சி நிர்ணய விவகாரம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயம் உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் நடைபெறவுள்ளன. இன்னும் பல சவால்களும் எமக்கு முன் உள்ளது.

இந்தநிலையில் எந்தவித நிபந்தனைகளும் இன்றி, முழுமனதுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளேன். ஹக்கீம் மாத்திரமல்ல முன்னாள் அமைச்சர்கள் அதாவுல்லா பேரியல் அஷ்ரப் போன்றோருடனும் நான் இணைந்து செயற்பட தயார்.

இங்கு முஸ்லிம்களின் நலனே பிரதானமானது. அதற்காக இணையத் தயார்.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு விவகாரத்தில் மலையக மற்றும் தமிழ் சமூகங்கள் ஒன்றுபட்டுள்ளன. நாம் பிரிந்துநின்று செயற்படமுடியாது. எமது சமூக நலன்கருதி சுயநலன்களுக்கு அப்பால் சிந்திப்போமாயின் இணைந்து செயற்படுவதைத் தவிர எங்களுக்கு மாற்றுவழி கிடையாது.

அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் போது, முஸ்லிம்களின் நலன்களை முன்வைப்பதற்காக ஏற்கனவே அமைச்சர்கள் காபிர் காசிம், பைசர் முஸ்தபா ஆகியோருடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன்.

மேலும் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், எம்.ஐ.எம். மொஹ்தீன் ஆகியோர் அடங்கலான குழுவினர் இதுகுறித்த தமது செயற்பாடுகளையும் ஆரம்பித்துள்ளனர். இவ்விடயத்தில் முழு முஸ்லிம் சமூகத்தையும் விழிப்பூட்டவும், அறிவுறுத்தவும் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் உதவியையும் நாடவுள்ளோம்.

எனவே சகல வேறுபாடுகளையும் மறந்து இந்தப்பணிகளில் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டுச் செயற்பட முன்வர வேண்டும். இதற்காக என்னால் ஆன முழு ஒத்துழைப்புகளையும் நல்குவதற்கு காத்திருக்கிறேன். 

முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒரே அணியில் ஒன்றுபட்டு தமது பரிந்துரைகளை சமர்ப்பிப்பதன் மூலம் கூடிய பயன்களை பெறலாம். பிரிந்து நின்று செயற்படுவதால் சமூகத்தின் நலன்கள் பின்நகர்த்தப்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த அபாயத்தை கவனத்திற்கொண்டு செயற்பட முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும் எனவும் றிசாத் பதீயுதீன் மேலும் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -