காணி அமைச்சர் பதவி எனக்கே வேண்டும் - ராஜிதவின் மகன்



எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் மறைவை அடுத்து வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் காணி அமைச்சர் பதவி ஆகியவற்றை தமது கட்சிக்கு வழங்க வேண்டும் என ஜனநாயக தேசிய அமைப்பு கோரியுள்ளது. 

இது சம்பந்தமாக அந்த அமைப்பு கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது.

சத்துர சேனாரத்ன தலைமையிலான ஜனநாயக தேசிய அமைப்பு கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டிருந்ததுடன் அதனடிப்படையில் இந்த நியமனங்கள் தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என அந்த அமைப்பின் பிரதித் தலைவர் ஸ்ரீலால் ரோஹன தெரிவித்துள்ளார்.

தமது அமைப்பின் இந்த தீர்மானம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடாக பிரதமரின் இது தொடர்பாக விசேட கோரிக்கை விடுக்கப்படும் எனவும் ஸ்ரீலால் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -