ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் அடிப்படையில் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்மொழிவுடன் இம்மாதம் 25 ஆம் திகதிமுதல் 30ஆம் திகதிவரை விளையாட்டு உடல்நல மேம்பாட்டு தேசிய உடற்பயிற்சி வாரம் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.
குறித்த உடற்பயிற்சி வாரத்தில் 26 ஆம் திகதி பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் தேகாரோக்கியத்தை மேம்படுத்தும் தினமாக பிரகடனப்படுத்தப் பட்டிருந்ததால், தேகாரோக்கியத்தை மேம்படுத்தும் உடற்பயிற்சி நிகழ்வுகள் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் அப்பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.நபார் தலைமையில் இடம்பெற்றது.
அல் ஜலால் வித்தியாலய உடற்பயிற்சி ஆசிரியர்களான ரீ.கே.எம்.சிராஜ், ஏ.சியாம் மற்றும் பல்கீஸ் ஜலீல் ஆகியோரது வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர் எம்.சம்சுதீன் உட்பட ஆசிரிய ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் தொற்றா நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த தேசிய உடற்பயிற்சி வாரம் அனுஷ்ட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.




