பொதுபல சேனா ஞானசார தேரருக்கு பெப்ரவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியல்..!

ன்று காலை கைது செய்யபட்டு பொலிஸ் காவலில் இருந்து, ஹோமாகம நீதிமன்றில் ஆஜர் படுததப்பட்ட ஞானசார தேரரை எதிர்வரும் பெப்ரவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னளியகொடவின் மனைவிக்கு நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியது, ஏசியது ஆகிய குற்றச்சாட்டுகளில் ஹோமாகம நீதிமன்றால் நேற்று பிடியாணை உத்தரவு பிடிக்கபட்டு இன்று காலை 10.00 மணியளவில் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -