"கிழக்கின் சக்தி" என்ற பெயரில் கிழக்கு மாகாண ஆளுநர் நடமாடும் சேவை...!

"கிழக்கின் சக்தி" என்ற பெயரில் கிழக்கு மாகாண ஆளுநர் நடமாடும் சேவை ஒன்றினை எதிர் வரும் 24 ஆம் திகதி டி .எஸ் .சேனநாயக்க கல்லூரியில் ஏற்பாடு செய்துள்ளதாக துண்டு பிரசுரங்கள் வெளி வந்துள்ளன .

ஆளுநர் தலமையில் கிழக்கு மாகாண மற்றும் மத்திய அரச உத்தியோகத்தர்களின் பங்கு பற்றுதலுடன் அம்பாறை மாவட்ட செயலகத்துடன் இணைந்து இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளதாக அந்த துண்டு பிரசுரம் தெரிவிக்கின்றது . இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைக்கு தீர்வை பெரும் களமாக இது அமையும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .

இதில் வேடிக்கை என்னவென்றால் கிழக்கு மாகாணத்தில் அந்த மக்களால் தெரிவு செய்யப்பட மக்கள் பிரதிநிதிகளையும் அந்த பிரதிநிதிகளின் தலைமை உறுப்பினரான முதலமைச்சரையும் அவருக்கு துணை புரியும் அமைச்சர்களையும் ஓரங்கட்டிவிட்டு அவசர அவசரமாக ஆளுநர் இவ்வாறான நடமாடும் சேவையினை குறுக்கு வழியை பயன்படுத்தி நடாத்ததுநிந்ததன் நோக்கம் என்ன ?.அதன் பின்னணிதான் என்ன ?.

ஆளுநராக பதவி ஏற்று இற்றை வரை எதையுமமே செய்யாத நிலையில் தீர்க்கப்படாத பிரச்சினை என்று அவர் எதை கருதுகின்றார் .தமிழர்களையும் முஸ்லீம்களையும் பெரும்பான்மையாக கொண்ட அம்பாறை மாவட்டத்தில் சிங்கள குடியேற்றத்தின் கதாநாயகனாக விளங்கிய டி எஸ் சேனநாயக்கவின் பெயரை கொண்ட ஒரு கல்லுரியில் இந்த போலி நடமாடும் சேவையினை நடத்துவதன் நோக்கம் தான் என்ன ?

ஆளுநர் தனது பலவீனத்தினையும் ஓட்டைகளையும் மறைப்பதற்காக அதிகார தோரணையில் இந்த நடமாடும் சேவையினை நடத்துவதாகவே மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .கூரையில் ஏறி கோழி பிடிக்கத்தெரியத இந்த ஆளுநர் வானத்தில் ஏறி வைகுண்டத்திட்கு வழி காட்டப்பர்கின்றார் . 

அதிகார பகிர்வு நல்லாட்சி என்றெல்லாம் பேசப்படும் இந்த கால கட்டத்தில் மத்திய அரசின் ஏவலாலரான இவர் இவ்வாறு நடப்பது முறைதானா ?.. குண்டு சட்டிக்குள் குதிரை ஒ ட்டப்பர்கின்றார் இந்த ஆளுநர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை தவிர்த்து விட்டு மக்கள் பனி புரிய புறப்பட்டதுதான் கேவலமானது என்று மக்கள் பேசுகின்றனர் .

ஆளுநர் நடத்த போவது நடமாடும் சேவையா அல்லது நடனமாடும் சேவையா என்பதையும் பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -