பாலமுனை ஸ்ரீ.மு.கா. அமைப்பாளருடன் அதிருப்தி கொழும்புக்கு படையெடுத்த சூரா சபை -படங்கள்


அபு சாலிஹ்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனைப்பிரதேச பாலமுனைக்கான அமைப்பாளர் எம்.ஏ.அன்சிலின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்து மாற்றுக் குழுவாக இயங்கி வரும் சி.ல.மு.கா. கட்சியின் பாலமுனை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சூரா சபையினருக்கும் கட்சித்தலைவர்  றஊப் ஹக்கீமுக்கிடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகமான தாறுஸ்ஸலாமில் நடைபெற்றது.

இதன்போது பாலமுனையில் கட்சிக்காகப் போராடும், கட்சிக்காக உழைக்கும், கஷ்டப்படும் மக்கள் இன்னும் கஷ்டத்துடனும், பிரச்சனைகளுடன் இருக்க கட்சியின் அதிகாரம் வழங்கப்பட்டவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு சிலர் பாலமுனை மக்களின் சேவைக்காக வரும் நிதிகளில் இருந்து சகல செளபாக்கியங்களையும் சுருட்டி ஏப்பமிடும்  குறிப்பிட்ட குழுவின் நடவடிக்கை வேதனையளிக்கிறது. இது தொடர்ந்தால் பாலமுனை ஊரில் கட்சியின் செல்வாக்கு பூச்சியமாகும் அவல நிலை தோன்றும் வாய்ப்பு அதிகரித்துள்ளமையால் தலைமையைச் சந்திக்க வந்திருப்பதாக தலைவரிடம் முறையிட்டனர்.

இவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட தலைமை கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்று அனைத்தையும் நிறைவேற்றித் தருவதாக பாலமுனை சூரா சபையிடம் இதன் போது உறுதியளிக்கப்பட்டது.

குறிப்பிட்ட இச்சந்திப்பின் போது சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், கட்சியின் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் உட்பட பாலமுனை சூரா சபையின் தலைவர் ஐ.எல்.சுலைமாலெவ்வை அதன் இணைப்பாளர்களான எம்.ஏ.சதாத் அதிபர் எஸ்.எம்.எம்.ஹனீபா ஏ.எல்.அலியார் ,செயலாளர் கே.ஜிஹார்டின் பொருளாளர் ஏ.பீ.றிஜால் உட்பட கட்சியின் ஆரம்ப காலப் போராளிகள் இளைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன் கட்சியின் தேசிய மாநாடு அம்பாரை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச பாலமுனைக் கிராமத்தில் நடைபெற ஏற்பாடு செய்துள்ளமையால் அதனை சிறப்பாக நடாத்துவதற்கு பூரண ஒத்துளைப்பு வழங்க வேண்டும் என்றும் தலைவர் பாலமுனை சூரா சபையிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -