கல்முனை பொலிஸ் பிரிவில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு சான்றிதல்கள் வழங்கி வைப்பு..!

எம்.வை.அமீர்-
ல்முனை பொலிஸ் பிரிவில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்ககளாகவும் ஆலோசகர்களாகவும் பணிபுரிபவர்களுக்கு பாராட்டி சான்றிதல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2016-01-09 ஆம் திகதி சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.எம்.கப்பார் தலைமையில் கல்முனை பொலிஸ் பிரிவின் மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிடின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.எல். ரணவீரவும் கௌரவ அதிதியாக கல்முனை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அசோக தர்மசேனவும் அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், டாக்டர் கே.எல்.எம்.றயீஸ் மற்றும் டாக்டர் ஏ.எல்.பாருக் ஆகியோரும் கலந்து கொண்ட அதேவேளை மதத்தலைவர்களும் அரச உயர் அதிகாரிகளும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -