மஹாவலி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30,400 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1984ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியினால் மட்டக்களப்பில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த முறைமையின் கீழ் மஹாவலி திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
அந்த காலப்பகுதியில் மகாவலி அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன, தொடர்ந்து அதேவேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மட்டக்களப்பில் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 1281 முஸ்லிம்களுக்கும், 34 தமிழர்களுக்கும் மாத்திரமே காணிகள் வழங்கப்பட்டுள்ளது.
