"கல்முனை மாநகரம்" ஆய்வு நூல் அறிமுக விழா..! (video)

எஸ்.எல்.அப்துல் அஸீஸ்-
ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய "கல்முனை மாநகரம் உள்ளூராட்சியும் சிவில் நிருவாகமும்" ஆய்வு நூல் அறிமுக விழாவும், முதுசங்கள் கௌரவிப்பும் நேற்று சனிக்கிழமை மாலை கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரி சேர் றாசிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஓய்வுநிலை அதிபரும், பிரதிக்கல்விப்பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.சீ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ.அஸீஸ், விசேட அதிதிகளாக மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எ.எம்.சலீம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்ததுடன், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், துறைசார் பிரதிநிதிகள், மநகர சபை அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன் நூல் பற்றிய உரைகளை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி எஸ். அனுசியா சேனாதிராஜா, எம்.எம்.பாசில் ஆகியோர்கள் நிகழ்த்தினர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -