காத்தான்குடி பிரதேச விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் விசேட சந்திப்பு.!

ஏ.எல்.டீன்பைரூஸ்-
காத்தான்குடி பிரதேச விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் விசேட சந்திப்பு 25.01.2016 ஆம் திகதியன்று விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான முபீனுக்கும் இடையில் அமைச்சுக் காரியாலயத்தில் நடைபெற்றது. 

மேற்படி சந்திப்பில் காத்தான்குடி பிரதேச விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பில் விசேடமாக ஆராயப்பட்டது. காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது மைதான அபிவிருத்தி காத்தான்குடி ஆரயம்பதி எல்லையில் அமைந்துள்ள விக்டரி மைதானத்தை விசேடமாக அபிவிருத்தி செய்தல் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் காத்தான்குடி பிரதேச விளையாட்டுக் கழகங்களை ஊக்கப்படுத்தல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. 

இதன்போது கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீஸ் தான் விரைவில் காத்தான்குடிக்கு விஜயம் செய்து மேற்படி மைதானங்களை பார்வையிடுவதுடன் விளையாட்டுக் கழகங்களையும் நேரில் சந்தித்து காத்தான்குடி விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதாக இணைப்புச் செயலாளர் முபீனிடம் உறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -