
மூத்த போராளி-
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று இடம்பெறும் கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்து கொள்ள சிறைச்சாலை வாகனத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் வருகை தந்துள்ளார்.
இன்றைய அமர்வில் பதில் முதலமைச்சராக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் அவர்கள் வழிநடாத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் அவர்கள் நாளை ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் நடைபெறும் "கிழக்கில் முதலீடு 2016" நிகழ்வுகளை ஒழுங்கமைக்கும் ஏற்பாடுகளை நேரடியாக மேற்பார்வை செய்யும் பொருட்டு இன்றைய சபை அமர்வுகளில் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.