ஈரானுக்கு எதிரான சவுதி அரேபியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளுடன், மேலும் சில நாடுகளும் இணைந்துள்ளன.
சவுதியின் சியா- முஸ்லிம் மதத் தலைவர் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, தெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அத்துடன் சவுதி அரேபியா பழிவாங்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனை அடுத்து சவுதியில் உள்ள ஈரான் தூதகரக அதிகாரிகளை வெளியேறுமாறு சவுதி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் சவுதிக்கு ஆதரவான பஹ்ரேயின், சூடான் ஆகிய நாடுகளும், ஈரானிய தூதகரகத்தை நீக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
