மறதியாக விட்ட 80,000/= பெறுமதியான கையடக்கதொலைபேசியை திருடியதாக முச்சக்கரவண்டி சாரதி கைது..!

க.கிஷாந்தன்-
பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு அட்டன் சிவனொளிபாதமலைக்கு சென்ற பிரான்ஸ் நாட்டவர் மீண்டும் தனது உல்லாச விடுதிக்கு திரும்புகையில் தான் பயணித்த முச்சக்கரவண்டியில் ஞாபகமறதியாக வைத்து சென்ற 80,000 ரூபா பெறுமதியான கையடக்கதொலைபேசியை திருடி விட்டார் என குற்றச்சாட்டில் அட்டன் பகுதியை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

04.01.2016 அன்று இரவு அட்டன் நகரில் குறித்த பிரான்ஸ் பிரஜைகள் தங்கியிருக்கும் விடுதிக்கு முச்சக்கரவண்டி ஒன்றின் ஊடாக வருகையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் தாம் மறதியாக வைத்து சென்ற கையடக்கதொலைபேசி காணாமல்போனதையடுத்து அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்ட பின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் விரைவாக செயல்பட்ட பொலிஸ் குழு அரை மணி நேரத்தில் முச்சக்கரவண்டியை கைது செய்து கையடக்கதொலைபேசியையும் கைப்பற்றியுள்ளனர்.

அதன்பின் பிரான்ஸ் பிரஜைகளிடம் கையடக்கதொலைபேசி பொலிஸார் கையளித்ததன் பின் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு பிரான்ஸ் பிரஜைகள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்ட முச்சக்கரவண்டி சாரதிக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கயிருப்பதாக அட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -