தனது மூன்று வயது குழந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்ற நபர் ஒருவர், கண்டி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான குழந்தை ஆபாத்தான நிலையில் கண்டி மருத்துவ மனை, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது.
35 வயதான குறித்த சந்தேக நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட அவமானம் காரணமாகவே, இந்த செயலை செய்ததாக தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் கிரிபத்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர். குடும்ப பிரச்சினை காரணமாக கண்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு மனைவி, குழந்தையுடன் சென்றுள்ளார்.
நேற்று மாலை தனது வீட்டுக்கு வருமாறு குறித்த சந்தேக நபர், மனைவியை அழைத்த போது, அதனை மனைவி மறுத்த காரணத்தால் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதனை தடுக்க சென்ற மனைவிக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை கண்டி காவல் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
