அக்கரைப்பற்றிலிருந்து திரைப்படம்? மக்கள் எதிர்ப்பு

"உங்களுக்கு முன்னிருந்த (யூத கிறிஸ்தவர்களின்) வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட, நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்'... என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?' என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'வேறு யாரை?' என்று (திருப்பிக்) கேட்டார்கள். (📚 புஹாரி 7320)

முஸ்லிம்கள் செறிந்து வாழும் அக்கரைப்பற்று பிரதேசத்திலே அல்லாஹ்வின் சத்திய மார்க்கத்தை ஏனையோருக்கும் எத்திவைக்க வேண்டும் என்று பல தியாகங்களுக்கு மத்தியில் ஒரு கூட்டம் சென்றுகொண்டிருக்க சினிமாக்கள் மூலமான அந்நியக் கலாச்சார மோகத்தில் மூழ்கி, நாகரீகம் என்ற பெயரில் நாளை மறுமை உண்டென்பதையே மறந்துவிட்ட ஒரு கூட்டமும் இங்கே உலாவுவதையும் கண்கூடாக காண முடிகிறது.

இன்று வீட்டுக்கு வீடு TV பெட்டிகள் . காலையில் கண்விழிப்பதும் அதில்தான். இரவில் கண்மூட வைப்பதும் அதில்தான். சினிமாவிலும் சீரியல்களிலும், சீரழிந்து எத்தனையோ குடும்பங்கள் சிதைந்த வரலாற்றிற்கும் சொந்தக்காரர்கள் நாம். 

அதுபோதாதென்று தற்போது எம்மவர்களே நடித்த திரைப்படம் கூட வெளியாக இருக்கிறது. படம் பார்ப்பது 🙈பாவம் என்று தெரிந்தும் பார்க்கிறோம். ஆனால் இன்று அந்தப் பாவத்திற்கு நாமே பாத்திரமேற்று படைத்தவனைப்பற்றி கெஞ்சமேனும் பயப்படாமல் படம் பண்ணும் தைரியம் முஸ்லிம்களாகிய எமக்குஎங்ஙனம் வந்தது? 🏿🏿🏿🏿 உங்கள் மனம் மறுமையை மறந்துவிட்டதா அல்லாஹ்வின் சாபம் எம் எல்லோர்மீதும் உண்டாகவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா முஸ்லிம்களாகிய எம் ஒவ்வொருவருக்கும் சுவனம்தான் இலக்கு 🔝. ஆனால் சினிமாவில் சிகரம்தெட்டு சீரழிவதுதான் இலக்கு 🔝 என்று எம்மவர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்.

'நஊதுபில்லாஹி மின்ஹா'  👥 அன்பிற்குரியவர்களே!

தராவீஹ், பிறை என்று றஸுலுல்லாஹ்வின் 'சுன்னா' விடயத்தில் சர்ச்சைப்படுகிறோம். ஏன்சுன்னாவை முழுமையாக பின்பற்றியவர்கள் நாமாக இருக்கவேண்டும். சுவனத்தின் சொந்தக்காரர்களாக ஆக வேண்டும்; என்றுதானே. 

ஆனால் இன்று மார்க்கத்திற்கே முற்று முழுதாய் முரணான , அல்லாஹ் ஹராம் என்ற சினிமாப் படத்தை திரையிடப் போகிறார்கள்😟. இதனால் ஏற்படப்போகும் தீங்கான விளைவுகள் இவ்வுலகோடு நிற்காது. மறுமையிலும் தொடரப்போகிறது என்பதை மறக்க வேண்டாம்🏿. இதனைத் தடுக்க 🚫ஊர் மக்களாகிய நாம் யாவரும் ஒன்றுசேர வேண்டும். 

பாவம் என்று தெரிந்தும் நாம் எந்தவொரு முயற்சியும் செய்யாமல் வாய்மூடி, மௌனிகளாக இருப்போமாக இருந்தால், எமக்கும் அல்லாஹ்வின் தண்டனை நிச்சயம். 

எனவே எம்மூரின் தலைசிறந்த உலமாக்கள், மார்க்க அறிஞர்கள் எல்லோரும் சேர்ந்து இத்திரைப்படம் திரையிடப்படாமல் தடுக்கவேண்டும்!

இப்படத்தை தயாரிக்க இவர்களுக்கு ஏற்பட்ட செலவீனங்களை நாம் யாவரும் சேர்ந்து அவர்களையும் அதிலிருந்து விடுபட வைக்க வேண்டும். படத்தின் பாத்திரதாரிகளே! கதையின் சூத்திரதாரிகளே! நீங்கள் யாவரும் எம் உடன் பிறவா 
சகோதரர்கள். எமக்கு நாளை மறுமையில் நீங்கள் கைசேதப்படுவதைப் பார்க்கும் சக்தியுமில்லை, மாற்றான் துன்பத்தில் இன்பம் காணுமளவு எங்கள் மனங்களும் மரத்துப் போய்விடவில்லை . அதற்காகத்தான் உங்களுக்காக இந்தளவு முயற்சி செய்கிறோம். நீங்கள் இதை ஒரு தொழிலுக்காகச் செய்திருந்தாலும், பொழுதுபோக்கிற்காகச் செய்திருந்தாலும், ஹராம் எச் சந்தர்ப்பத்திலும் ஹராம் தான். 

இதற்காக நீங்கள் செலவு செய்த ஒவ்வொரு ரூபாயும் , இதனால் வசூலிக்கபோகும் ஒவ்வொரு ரூபாயும் தெட்டத் தெளிவான ஹராம். இந்த ஹராமான பணத்தின் மூலம் வளரும் உங்கள் உடம்பு சுவனத்தின் வாடையைக் கூட நுகராது. உங்கள் துஆக்கள் கூட அங்கீகரிக்கப்படாது. 

அன்பின் சகோதரர்களே!

எந்த நிமிடம் 🕛 உங்களுக்கு மரணம் என்பது உங்களுக்கு தெரியுமா நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மரணத்தை நாம் சுவைத்தே ஆக வேண்டும் . கப்ரின் வாழ்க்கையை வாழ்ந்தே ஆக வேண்டும் . 

கப்ரின் வேதனை பற்றி கடுகளவேனும் உங்கள் கல்புகளில் பயம் வரவில்லையா? 

நரக நெருப்பைப் 💥 பற்றிய நடுக்கத்தினை நீங்கள் உணரவில்லையா?  நாளை மறுமையில் அல்லாஹ் எங்களைப் பார்;த்து ' நீ இளமையை எவ்வாறு கழித்தாய்?
'நீ எவ்வாறு சம்பாதித்தாய்? 'செலவழித்தாய்?' என்றெல்லாம் கேட்பானே? 

எமது பதில்கள் திருப்தி இல்லை என்றால், எம் தங்குமிடம் நரகமாகிவிடுமே! 
அல்லாஹ்வை பயந்து நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம் நீங்கள் செய்த தவறை 

உணர்ந்து 🙇 அல்லாஹ்விடம் 'தவ்பா' செய்து மீளுவீர்களானால் நிச்சயம் அல்லாஹ்  உங்களை மன்னிப்பான் 💯✔ 'அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கின்றான்' 
நாளை மறுமையில் நீங்களும், நாங்களும் அல்லாஹ்வின் தூதர் றஸுல் (ஸல்) அவர்களோடு சுவர்க்கத்திலே ஒன்றாக 👬👬இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். 
அன்பின்; சகோதரர்களே!  நீண்ட தூரப் பிரயாணத்தில் இளைப்பாற வந்த ஒரு மரநிழல் 🌳தான் இந்த உலகம். நிரந்தரமல்லாதது. நிரந்தரமான மறுமைவாழ்வு எமக்காக காத்திருக்கிறது. நன்றாகச் சிந்தியுங்கள். உலகத்தின் மாயை உங்களை நரகத்தில் மூழ்கச் செய்திட வேண்டாம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 

'யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. 

அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் அதன்படி செயல்பட்டவர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு' என்று கூறினார்கள். 

(முஸ்லிம் 1848)
நேர்வழி காட்டப் போதுமானவன் அல்லாஹ் ஒருவனே! 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -