2016 பாதீட்டில் முன்வைக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மற்றும் தேசிய நிர்மாண வரி என்பன ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த வரிகள் தொடர்பான சீர்த்திருத்தங்கள் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும்வரை அதனை விலக்கி கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழ்கை செலவு மீதான அழுத்தங்களை கருத்திற் கொண்டே அந்த வரி சீர்திருத்த நடைமுறைப்படுத்தல் கைவிடப்பட்டுள்ளது.
அத்துடன் மொத்த மற்றும் சில்லறை விற்பனை மையங்களிலும் குறித்த வரி நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
