தமது அயலவருடன் ஏற்பட்ட தர்க்கத்தை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவின் கணவர் யடோவிட்ட, பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
ஹிருனிக்காவும் அவரின் கணவரும் தமது வீடு அமைந்துள்ள ஹெவலொக் சிட்டிக்கான சிறுபாதையில் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அயலவரின் கார் எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்தது
இதன்போது இரண்டு வாகனங்களும் முன்செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் எவரும் விட்டுக்கொடுக்காமல் இருந்ததுடன், தமது காரை பின்னால் திருப்பிச்செல்ல இணங்கவில்லை.
இதன்போதே இரண்டு தரப்புக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் குறித்த சம்பவத்தை ஊடகம் மூலம் வெளிக்கொணரப்போவதாக அயலவர் தம்மை அச்சுறுத்தியதாக யடோவிட்ட பொலிஸில் முறையிட்டுள்ளார்.
