நாம் வெற்றிபெற்றுவிட்டோம் - பொதுபல சேனா ஜனாதிபதிக்கு அறிக்கை

வில்பத்து காடழிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு பாராட்டத்தக்கது என பொதுபல சேனா அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு, 2013 இல் வில்பத்து வன அழிப்பு தொடர்பில் பொதுபல சேனா ஆரம்பித்த போராட்டத்தின் ஒரு வெற்றியாகும் எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகள் தொடர்பில் கண்டறியப்பட வேண்டும் எனவும், தேசிய பாதுகாப்புக்கு இதனால் எதிர்காலத்தில் ஏற்படும் அச்சுறுத்தல்களை இல்லாமல் செய்யப்பட வேண்டும் எனவும், வேறு பிரதேசங்களில் இடம்பெறும் சூழல் பாதிப்புகளையும் இல்லாமல் செய்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பொதுபல சேனா கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவ்வமைப்பு எடுத்துக் காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -