வட்டவளையில் வேன் விபத்து - 5 பேர் காயம்

க.கிஷாந்தன்-
ட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் வெளிஓயா பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஒன்று அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியதில் 5 பேர் காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து 05.01.2016 இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் வெளிஓயா பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் மூவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் இதில் சிறுவர் ஒருவர் அடங்குவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -