ஹிருணிக்காவுக்கும் அவரது தயாருக்கும் வந்த சோதனை..!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர மற்றும் அவரது தயாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மார்ச் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பேர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

தமக்கு சொந்தமான கட்டடம் ஒன்றை ஹிருணிக்காவும் அவரது தயாரான சுமணாவும் பலவந்தமாக கைப்பற்றி வைத்துள்ளதாக குற்றம் சுமத்தியே வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

கட்சி அலுவலகத்திற்காக இவர்கள் தமக்கு சொந்தமான கட்டடத்தை பெற்றுக்கொண்டதாகவும் அதனை தம்மிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் முதல் கோரிக்கை விடுத்து வருவதாகவும்,

ஆனால் இதுவரை அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -