தெமட்டகொட பேஸ்லைன் வீதியின் மஞ்சள் கடவையில் 47 வயதான பெண் ஒருவரும் 10 வயதான அவரது மகளும் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்திருந்தனர்.
உயிரிழந்த பெண்ணின் மார்பு கச்சையிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பெண்ணின் உடலை சுமந்து சென்றபோது, அங்கு இருந்த ஒருவர் (“මෙන්න බඩු තියෙනවා“ ) இதோ ‘குடு’ இங்குள்ளது என சத்தமிட்டதால் வைத்தியசாலை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
வைத்தியசாலை பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
வாகன விபத்தினை மேற்கொண்டதாக குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர் ஒருவரும் அவரது தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
