கட்டாரில் வாழும் சகோதரர்களே சற்று எச்சரிக்கையாக இருக்கவும் - கட்டாரில் நடந்த ஓர் சம்பவம் இது

ட்டாரில் வாழும் சகோதரர்களே சற்று எச்சரிக்கையாக இருக்கவும். இது கட்டாரில் நேற்று நம்மவர் ஒருவர் வசிக்கும் பிரதேசத்தில் நடந்த சம்பவம்.

நேற்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஒரு சகோதரர் நம்மவர் வசிக்கும் பகுதிக்கு வந்து “தான் காஸ்மீரில் இருந்து வருவதாகவும் . அங்கு பல அநாதைச் சிறுவர்கள் அவரது கண்கானிப்பில் பாராமரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு உண்பதற்கு தங்குவதற்கு போதியளவு வசதியில்லையெனவும் அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாரும் கூறி. ஓரிரு ஹதீஸ்களையும் கூறினார்“.

அவர் பார்ப்பதற்கு தோப் அனிந்து, தாடி வைத்து இருந்ததனால் அவரை உள்ளே அழைத்து குழந்தைகளைப் பற்றி விசாரிக்க அக் குழந்தைகளின் போட்டோ மற்றும் உறுது மொழியில் எழுதிய ஆவணம் ஒன்றையும் காட்டினார்

அதே வேலை நம்மவருக்கு அருகாமையில் இருக்கும் நன்பர் இது போல பல போலி அமைப்புக்கள் இயங்குகின்றதெனவும் இது பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டுமென கூறி அவரது கையில் இருந்த உறுது மொழி அட்டையை வாங்கி அதிலுள்ள நம்பருக்கு call எடுக்க முயற்சிக்கும் பொழுது இவர்கள் இருவரையும் தள்ளிவிட்டு காலில் போட்டுவந்த காலனியைக் கூட போடாமல் ஓடிவிட்டார்.

எனவே நன்பர்களே இது போல இஸ்லாத்தின் பெயரைக் கூறி உங்களிடத்தில் யாராவது உதவி செய்யுமாறு கோறி வந்தால் குறிப்பாக (பாகிஸ்தான், காஸ்மீர் ) நபர்கள் வந்தால் சற்று உசாராக இருக்கவும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -