கூட்டு எதிர்கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து உருவாக்கவுள்ள புதிய கட்சியின் தலைமைத்துவத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் தற்பொழுது கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்களிடையே நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தலைமைத்துவத்தை வழங்குவது என இதுவரை நடைபெற்ற கலந்துரையாடல்களில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சில சமயம் அதனை மஹிந்த ராஜபக்ஷ மறுக்கும் பட்சத்தில் தலைமைத்துவத்தை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு வழங்குவதாகவும் முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி தலைவர்களிடையே அதிக மக்கள் ஆதரவுள்ள தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காணப்படுவதாகவும், மக்கள் மத்தியில் என்றும் வரவேற்பு அதிகம் உள்ளது குறித்த இரு சகோதர்களுக்கு மாத்திரமே எனவும் கூட்டு எதிர்கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அகவே இந்த இரு சகோதரர்களை கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக புதிய அரசியல் பலத்தை உருவாக்கமுடியும் எனவும், முடியுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த இருவரையும் மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல இயலுமான முயற்சிகளை மேற்கொள்ள குறித்த கலந்துரையாடல்களில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கூட்டு எதிர்கட்சியினர் மேற்கொள்ளும் கலந்துரையாடல்களுக்கு மஹிந்த மற்றும் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.
“புதிய ஸ்ரீ லங்கா சுதந்திர முன்னணி” எனும் பெயரில் கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
