சவூதியிலிருந்து நாடு திரும்பிய பெண் வீட்டுக்கு வரவில்லை - மாமனார் புகார்

க.கிஷாந்தன்-
ட்டன் டிக்கோயா தோட்டத்திலிருந்து சவூதி நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்று நாடு திரும்பிய பெண் இதுவரையும் தனது வீட்டிற்கு வரவில்லை என பெண்ணின் மாமனாரான ஆறுமுகம் பச்சைமுத்து அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

2013ம் ஆண்டு அட்டன் டிக்கோயா தோட்டத்திலிருந்து லெட்சுமனன் சிவகாமி (வயது 29) என்ற பெண் மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவிற்கு இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் தொழிலுக்கு சென்றுள்ளார். இவ்வாறு சென்ற இப்பெண் கடந்த 2015.10.08ம் திகதி தனது ஒப்பந்த காலம் முடிவுற்ற பின் நாடு திரும்பியுள்ளார்.

ஆனால் இதுவரை நாடு திரும்பிய பெண் வீடு வந்து சேரவில்லை என தனது மாமனாரால் முறைபாடு செய்யப்பட்டது மட்டுமன்றி தேடுதலும் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயான சிவகாமியின் கணவர் சுதாகர் (வயது 36) மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. 14 மற்றும் 5 வயதில் ஆண் பிள்ளைகள் இருவர் தனது தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றனர். மருமகள் 2013ம் ஆண்டு வெளிநாட்டுக்கு சென்றபின் 10 மாதங்கள் கடந்து ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் மாத்திரமே எமக்கு கிடைக்கப்பெற்றது. 

ஆனால் இத்தொகையினை கொண்டு பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை மற்றும் குடும்ப செலவு போன்றவற்றை மேற்கொண்டு வந்ததாகவும் மேலதிக குடும்ப செலவுக்காக வயது போன நாங்கள் நகரத்திற்கு சென்று கூலி வேலை செய்து வருமானத்தை பெற்று வந்ததாகவும் பொலிஸ் முறைபாட்டில் மாமனார் குறிப்பிட்டுள்ளார். இருந்தும் கடந்த பத்தாம் மாதம் நாடு திரும்பிய எனது மருமகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ஆகையால் இவரின் தொடர்பாக விடயங்கள் அறிந்தவர்கள் பொலிஸாருக்கு தெரிவிக்கும் படி தன் மருமகளுக்காக மாமனார் கேட்டுள்ளளார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -