விமானப் படை விரர்களுக்கு முகப்புத்தக பாவனை தடை செய்யப்பட்டுள்ளது..!

திர்வரும் காலங்களில் விமானப் படை விரர்களுக்கு பேஸ்புக் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானப்படை தளபதி சுகத் புளத் சிங்களவின் உத்தரவுக்கு அமையவே விமானப்படை நிர்வாக இயக்குனர் இதற்கான அறிவுறுத்தலை விமானப்படை வீரர்களுக்கு வழங்கியுள்ளார்.

அதன்படி, சுமார் 4000 விமானப்படை வீர வீராங்கணைகள் தமது முகப்புத்தகத்தை பயன்படுத்தும் உரிமையை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், தற்போது விமானப்படை வீரர்களும் அதிகாரிகளும் பயன்படுத்திவரும் முகப்புத்தக கணக்குகளையும் அவர்கள் முடக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளதாக விமானப்படை வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே இவ்வாறு முகப்புத்தக தடை அமுல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் போதும் ஏனைய படைகளில் அத்தகைய தடைகள் அமுல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -