எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டை பாலமுனையில் நடாத்த முடியாத நிலமையிருப்பதாக பாலமுனை பொதுமக்கள் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டுக்கு இலங்கையில் சகல பகுதிகளில் இருந்தும் மக்கள் திரண்டு வருகைதரவுள்ளனர். ஆனால் அப்படிக் திரண்டு வரும் மக்களுக்கு பாலமுனை மைதானம் ஒரு வீதமும் ஒத்துவராத கவலையான நிலமை காணப்படுகிறது.
உதாரணமாக முற்று முழுதாக வெயிலால் சூழப்பட்டுள்ள இம்மைதானத்தில் எவ்வாறு தகட்டுக் கொட்டில் அடித்தாலும் கடலை அன்மித்த பகுதி என்பனதால் நெருப்பையும்விட அதிகமான வெப்பம் காணப்படும். அவசரத்துக்கு ஒதுங்கி நிற்க ஒரு மரம் கூட இல்லை. பல்லாயிரம் மக்கள் கலந்து கொள்ளும் இவ்விடத்தில் முக்கிய தேவையான ஒரு மலசல கூடமில்லை.
பக்கத்தில் பள்ளியில்லை, தேனீர் குடிக்கவேனும் ஒரு கடையேனுமில்லை, குடி நீருக்கு பெரும் தட்டுப்பாடு பக்கத்தில் குடிநீர் வசதியில்லை. இப்படி பெரும் அவதியான நிலமை காணப்படும் பாலமுனை மைதானத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய மாநாட்டை இங்குதான் நடாத்த வேண்டிய கட்டாயம் என்ன பாலமுனை அமைப்பாளரை மட்டும் திருப்திப் படுத்தும் எண்ணமிருந்தால் அவரின் வீட்டில் நடத்துங்கள் கட்சிப் போராளிகளை அநியாயமாக சீரளிக்காதீர்கள்.
மாறாக அனைத்து வசதியும் சிறப்பாகவிருக்கும் சிறப்புமிகுந்த நிழல், மலசல கூடம், பல கடைகள், பள்ளிவாசல், அருகில் பிரதேச சபை, வைத்தியசாலை, குடி நீர் வசதிகள், இளப்பாறும் பூங்கா, என்று தேவையான சகல வசதியும் கொண்ட பாலமுனைக்கு அருகில் இருக்கும் நிந்தவூர் மைதானமும் கட்சியின் செயலாளர், பிரதி அமைச்சர், மாகாணசபை உறுப்பினர், பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர் என பெரும் பட்டாளத்தைக் கொண்ட ஊரில் இம்மாபெரும் மாநாட்டை நடாத்தாமல் ஒருவரின் கோரிக்கைக்காக பாலமுனையில் நடத்தினால் இதனைவிட கட்சிப்போராளிகளுக்கு தலைமை செய்யும் துரோகம் வேறொன்றுமிருக்காது.
ஆகவே எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவிருக்கும் கட்சியின் இம்மாபெரும் தேசிய மாநாட்டை சகல வசதிகளும் உள்ளடங்கிய நிந்தவூர் மைதானத்தில் நடாத்துமாறு தலைவரை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
