அம்பறை மாவட்ட ஊடகவியலாளர் எம்.ஏ.றமீசுக்கு புலமைப் பரிசில்...!

டகவியலாளர்களின் திறன்களை விருத்தி செய்யும் வகையில் வெகுசன ஊடக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அசி தசி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அண்மையில் தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.ஏ.றமீஸ் அமைச்சர் கயந்த கருணாதிலக்க விடமிருந்து புலமைப் பரிசிலைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான,அமைச்சின் செயலாளர் வஜிர நாரம்பனாவ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனைஐச் சேர்ந்த இவர் அண்மையில் அம்பாறை மாவட்ட ஊடகவிலாளர் சம்மேளனத்தின் இருபதாவது வருட நிறைவு விழாவில் சிறந்த ஊடகவியலாளராக தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் அட்டாளைச்சே னை தேசிய பாடசாலையின் தற்போதைய ஆங்கில ஆசிரியராகவும் சேவையாற்றி வருகின்றார். இலங்கை வானொலி பிறை எம்.எம்.சேவையின் அறிவிப்பாளரும், அரச சார்பற்ற நிறுவனமொன்றின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளருமான இவர் ஊடகத்துறையில் 17 வருட காலமாக இணைந்து சேவையாற்றி வருகின்றார்.

கடந்த 1999 காலப்பகுதியில் நவமணி பத்திரிகையின் செய்தியாளராக ஊடகத்துறைக்குள் பிரவேசித்த இவர் 2000 ஆண்டு தினக்குரல் பத்திரிகையின் அட்டாளைச்சேனை செய்தியாளராக தினசரிப்பத்திரிகையினுள் பிரவேம் பெற்றார்.

தற்போது வீரகேசரிப்பத்திரிகையின் தீகவாபி நிருபராகவும், தினகரன் பத்திரிகையின் அட்டாளைச்சேனை நிருபராகவும், விடிவெள்ளி பத்திரிகையின் அக்கரைப்பற்று நிருபராகவும், மெற்றோ நியுஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் சிலவற்றுக்கும் இணையத்தள செய்தி சேவைகளுக்கும் எம்.ஏ.றமீஸ் என்ற பெயரில் எழுதி வருகின்றார்.

ஊடகத்துறை டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்து கொண்ட இவர்; இணையத்தள சேவையொன்றின் செய்தி முகாமையாளராக செயற்பட்டு வருகின்றார். புலமைப்பரிசிலுக்காக எம்.ஏ.றமீஸுக்கு புலமைப்பரிசில் வழங்குவதையும் அருகில் ஆகியோர் நிற்பதையும் படத்தில் காணலாம்.

ஊடகவியலாளர்களின் திறன்களை விருத்தி செய்யும் வகையில் வெகுசன ஊடக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அசி தசி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அண்மையில் தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.ஏ.றமீஸ் அமைச்சர் கயந்த கருணாதிலக்க விடமிருந்து புலமைப் பரிசிலைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான, அமைச்சின் செயலாளர் வஜிர நாரம்பனாவ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனைஐச் சேர்ந்த இவர் அண்மையில் அம்பாறை மாவட்ட ஊடகவிலாளர் சம்மேளனத்தின் இருபதாவது வருட நிறைவு விழாவில் சிறந்த ஊடகவியலாளராக தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் அட்டாளைச்சே னை தேசிய பாடசாலையின் தற்போதைய ஆங்கில ஆசிரியராகவும் சேவையாற்றி வருகின்றார். 

இலங்கை வானொலி பிறை எம்.எம்.சேவையின் அறிவிப்பாளரும், அரச சார்பற்ற நிறுவனமொன்றின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளருமான இவர் ஊடகத்துறையில் 17 வருட காலமாக இணைந்து சேவையாற்றி வருகின்றார்.

கடந்த 1999 காலப்பகுதியில் நவமணி பத்திரிகையின் செய்தியாளராக ஊடகத்துறைக்குள் பிரவேசித்த இவர் 2000 ஆண்டு தினக்குரல் பத்திரிகையின் அட்டாளைச்சேனை செய்தியாளராக தினசரிப்பத்திரிகையினுள் பிரவேம் பெற்றார்.

தற்போது வீரகேசரிப்பத்திரிகையின் தீகவாபி நிருபராகவும், தினகரன் பத்திரிகையின் அட்டாளைச்சேனை நிருபராகவும், விடிவெள்ளி பத்திரிகையின் அக்கரைப்பற்று நிருபராகவும், மெற்றோ நியுஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் சிலவற்றுக்கும் இணையத்தள செய்தி சேவைகளுக்கும் எம்.ஏ.றமீஸ் என்ற பெயரில் எழுதி வருகின்றார்.

ஊடகத்துறை டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்து கொண்ட இவர்; இணையத்தள சேவையொன்றின் செய்தி முகாமையாளராக செயற்பட்டு வருகின்றார். புலமைப்பரிசிலுக்காக எம்.ஏ.றமீஸுக்கு புலமைப்பரிசில் வழங்குவதையும் அருகில் ஆகியோர் நிற்பதையும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -