மர்ஹும் ஹமீட் அவர்களுடைய இழப்பு நேர்மையான அரசியல்வாதி ஒருவரின் இழப்பாகும் - அதாஉல்லா

ஜே.எம்.வஸீர்-
ர்ஹும் ஐ.யு.ஹமீட் அவர்களுடைய இழப்பு நேர்மையான அரசியல்வாதி ஒருவரின் இழப்பாகவே அமைந்திருக்கின்றது.

கல்முனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் , புனர்வாழ்வு அதிகார சபையின் முன்னாள் தலைவரும் , இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளராகவும் இருந்த ஐ.யு.ஹமீட் அவர்களின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் , ஆழ்ந்த கவலையும் அடைகின்றேன்.

தலைவர் அஷ்ரப் அவர்களுடைய காலம் தொட்டு அரசியல் நாணயமும் , தலைமைத்துவ விசுவாசமுள்ளவராகவும் தொழிற்பட்டவர் ஐ.யு.ஹமீட் அவர்கள். தலைவர் அஸ்ரப் அவர்களின் மரணத்தின் பின்பு அவர் விட்ட இடத்தில் இருந்து நேரிய அரசியல் பாதையில் பயணிப்பதற்காக தேசிய காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவராக இணைந்து கொண்டார் ஐ.யு.ஹமீட் அவர்கள்.

மிகுந்த நாணயமும் , நேர்மையான அரசியல் சிந்தனையும் தலைமைத்துவ விசுவாசமும் இவற்றுக்கெல்லாம் மேலாக சமூகம் தொடர்பான பற்றும் கொண்ட ஒரு அரசியல் தலைவர் ஆவார். அவரின் இழப்பு எமது கட்சிக்கும் எமது மருதமுனை மண்ணுக்கும் ஒட்டு மொத்த சமூகத்திற்குமான இழப்பாகும்.

மேலும் தேசிய ரீதியில் பல நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை ஏற்று கண்ணியமாக அவற்றை நிருவகித்ததன் மூலம் தேசிய ரீதியில் பலர் மனங்களில் இடம் பிடித்த அவரின் இழப்பு முழுத் தேசத்திற்குமுரிய இழப்பாகும்.

அண்ணாரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தார்கள் , தேசிய காங்கிரஸின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அண்ணாரின் மறு உலக வாழ்க்கை இன்பமாய் அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

அதாஉல்லா,
தலைவர் - தேசிய காங்கிரஸ்,
முன்னாள் அமைச்சர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -