சுலைமாலெவ்வையின் முயற்சியில் மின்சார இணைப்பும், தெருவிளக்குகளும் நிறைவேற்றி வைப்பு..!

எஸ்.என்.றிஸ்லி-
நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் வை.எல். சுலைமாலெவ்வையின் முயற்சியின் கீழ் நிந்தவூர் -11 இமாம் ஹஸ்ஸாலி முதலாம் குறுக்குத் தெரு வீதிக்கான மிக நீண்டநாள் குறையாகவிருந்த இவ்வீதிக்கான மின்சாரத் தேவையும், தெருவிளக்குகளும் இன்றைய தினம் (03) நிறைவேற்றி வைக்கப்பட்டது.

அந்தவகையில் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எம்.ஜௌபர், பிரதேச சபையின் பிரதான முகாமைத்துவப்பணிப்பாளர் யூ.எல்.எம்.இஸ்மாயில், பிரதி அதிபர்களான எம்.ஐ.இஸ்ஹாக், எம்.அச்சிமுஹம்மட் உள்ளிட்ட அதிதிகளால் இவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதேவேளை மின்னினைப்பு வழங்கப்பட்ட குறித்த பிரதேசமானது கடந்த சுனாமியின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்காலிக கொட்டில்கள் அமைத்து அவர்கள் தங்கியிருப்பதற்கு விஷேட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -