சாய்ந்தமருது பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல்..!

ஹாசிப் யாஸீன்-
சாய்ந்தமருது பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடலும்,பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து ஓய்வுபெற்றுச் சென்ற மற்றும் மாற்றலாகிச்சென்றவர்களுக்குமான பிரியாவிடை வைபவமும் சனிக்கிழமை (02) அன்று பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளரும், பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் தலைவருமான ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கணக்காளர் எம்.எம்.உசைனா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை, திவிநெகும தலைமைமுகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலகத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்றுச் சென்ற கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.ஜமால்தீன், கிராம சேவை உத்தியோகத்தர் ஐ.எல்.ஹம்சா ஆகியோருக்கு வாழ்த்துப்பா, அன்பளிப்பு மற்றும் நினைவுச் சின்னம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாற்றலாகிச் சென்ற கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரஃப், முகாமைத்துவ உதவியாளர் எம்.எம்.றபீக், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.றிஸ்வானா ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் விஷேட அம்சமான சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களை மாற்றலாகிச் சென்ற முகாமைத்துவ உதவியாளர் எம்.எம்.றபீக் மாலை அணிவித்து அன்பளிப்பு வழங்கி கௌரவித்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் 2016ம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் பகற்போசன நிகழ்வும் இடம்பெற்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -