அனைத்து பேக்கரி தயாரிப்புக்களும் 5 ரூபாவினால் அதிகரிப்பு..!

னைத்து பேக்கரி தயாரிப்புக்களும் 5 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரவு செலவு திட்டத்தில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமையின் காரணமாகவே, விலையை அதிகரித்ததாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கதின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும், இது தொடர்பாக பேக்கரி உரிமையாளர்கள், நுகர்வோர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபடவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எந்த விதமான அறிக்கைகளும் வழங்காமல் விலை அதிகரித்துள்ளமை காரணமாக, நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பேக்கரி உரிமையாளர்கள், பாரிய வீழ்ச்சியினை எதிர் நோக்குவதாக, சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -