கட்டார் வாழ் இறக்காம மக்களுக்கிடையிலான குளிர்கால ஒன்று கூடல் அண்மையில் கட்டார் உம்சலால் அலி றிஷோட்டில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற இவ்வொன்று கூடலில் இறக்காமத்தைச் சேரந்த அனைவரும் தங்களது குடும்பத்துடன் கலந்துகொண்டதுடன் அனைத்து நிகழ்ச்சிகளையும் முழுமையாக சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
கலை நிகழ்ச்சி, விளையாட்டு, சமையல் என பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், சிறியோர் முதல் பெரியோர் வரை கலந்து தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டினர்.
மேலும் இவ் ஒன்றுகூடலின்போது ஜூம்ஆ பிரசங்கமும் தொழுகையும் மௌலவி எப்.எம்.அஸார் அவர்களினால் நிறைவேற்றப்பட்டமை இந்நிகழ்வை மெருகூட்டியது.
நிகழ்வின் இறுதியில் வெற்றிபெற்ற குழுக்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டதுடன், சிறப்பு பரிசில்களும் மற்றும் சிறுவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
31.12.2015 விழாயக்கிழமை பி.ப 6.00 மணி முதல் அடுத்தநாள் பி.ப 6.00 மணி வரை 24 மணித்தியாலயங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்நிகழ்ச்சி கட்டார் வாழ் இறக்காம மக்களின் உள்ளங்களில் வரலாற்று நிகழ்ச்சியாக உருமாறியதுடன் இந்நிகழ்ச்சயில் கலந்துகொண்ட அனைவரினதும் முழுத்திருப்பிதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்ற நிகழ்வுகளை எதிர்வருங்காலங்களில் ஏற்பாடு செய்யுமாறு பங்குபற்றிய அனைவரும் வேண்டிக்கொண்டனர்.


