யோசித ராஜபக்சவுக்கு பெப்ரவரி 13வரை விளக்கமறியல் : மகனை பார்க்கச் சென்ற மகிந்த (படங்கள்)

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட லெப்.யோசித ராஜபக்ச கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரையும் எதிர்வரும் பெப்ரவரி 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அவர், கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது. பெரும் எண்ணிக்கையான சிறப்பு அதிரடிப்படையினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, யோசித ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிவான் அனுமதி அளித்த பின்னர், அவரை சிறைச்சாலைக்கு கொண்டு செல்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் சிறைச்சாலை பேருந்து கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்துக்குள் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், வெளியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்ட தகவலை அறிந்ததும், மகிந்த ராஜபக்சவும், நாமல் ராஜபக்‌ஷ மற்றும் சிராந்தி ராஜபக்‌ஷ ஆகியோர் சென்றதாகவும் தெரியவருகிறது.


யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்ட தகவலை அறிந்ததும், மகிந்த ராஜபக்சவும், நாமல் ராஜபக்‌ஷ மற்றும் சிராந்தி ராஜபக்‌ஷ ஆகியோர் பார்வையிடச்சென்றனர். >>>http://www.importmirror.com/2016/01/13_17.html
Posted by importmirror.com on Saturday, 30 January 2016


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -